சோழனின் வாரிசுகள்
சோழர்களின் குல தெய்வக் கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில் அக் காலத்தில் வன்னிய குல க்ஷத்ரிய அரசர்களான பிச்சாவரம் சோழர்களுக்கு நடைப்பெற்ற முடிசூட்டு விழாவை “வேடிக்கை பார்க்க” மற்றும் “வேலை செய்ய” வந்தவர்களின் வாரிசுகள் தான் இப்போது தங்களை “சோழ மன்னர்களின் வாரிசுகள்” என்று எவ்வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்லுகிறார்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை அம்பலத்தின் பொற்கூரையில் இருக்கும் “பஞ்சாட்சரப் படியில்”, தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ மன்னர்களை அமரவைத்து, எம்பெருமானுக்குஅன்றாடம் செய்யப்பெறும் வலம்புரி சங்கால் “திருஅபிஷேகம்” செய்தபிறகு மந்திரங்கள் எழுதப்பெற்ற பனைஓலையை மன்னருக்கு நெற்றியில் பட்டமாக கட்டுகிறார்கள்.
தில்லை வாழ் அந்தணர்கள் முடிசூட்டு விழாவின் போது, பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு “வளவன் வாழ்க” என்று “மணிமுடி சூட்டுகிறார்கள்”. அதன் பிறகு புலிக்கொடியை பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு கொடுக்கிறார்கள். இத்தகைய “புலி கொடி” தான் உண்மையான சோழர்களின் புலிக்கொடியாகும்.
முடிசூட்டு விழாவின்போது, சோழர்களின் குல மாலையான “ஆத்தி மாலையை” தில்லை வாழ் அந்தணர்கள் பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு அணிவிக்கிறார்கள்.
முடிசூட்டு விழா முடிந்ததும் “ராஜ கம்பிரத்துடன்” சிதம்பரத்தின் ராஜ வீதிகளில் யானையில் உலா வருகிறார்கள், வன்னிய குல க்ஷத்ரியர்களான பிச்சாவரம் சோழ அரசர்கள்.
முடிசூட்டு விழாவின் போது, தில்லை வாழ் அந்தணர்களிடம் முடியெடுத்து கொடுக்கும் வேலையாட்கள் கூட, இன்று தாங்கள் தான் சோழர்களின் வாரிசுகள் என்று பொய் சொல்கிறார்கள். சோழர்களின் சமூகத்தை சேர்ந்த வன்னியர்கள், அவர்களிடம் சோழர்கள் காலத்தில் வேலை செய்ததாக சிதம்பரம் வரலாற்று கூட்டத்திலேயே எந்த வித சான்றுகளும் இல்லாமல் பொய் சொல்கிறார்கள்.
சோழர்கள் காலம் முதல் இன்று வரை, தங்களது குல தெய்வ கோயிலான தில்லை ஆடல்வல்லான் கோயிலில் “சோழ மன்னர் மண்டகப்படி” செய்யும் சோழ அரசர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ அரசர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிப்பவர்களின் மரபினர்கள் தான் இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்கிறார்கள்.
இப்படி இந்த முடிசூட்டு விழா /சோழ மன்னர் மண்டகப்படிகளை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் மற்றும் வேலை செய்ய வந்தவர்களின் வாரிசுகள் தான், இன்று தங்களை தாங்களே சோழர்கள் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
எல்லாம் காலத்தின் கோலமாகும்.
No comments:
Post a Comment