வன்னிய சொந்தங்கள் அனைவரும் வன்னியர் உலகம் blog ஐ follow செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம் New Update: Vanniyar Matrimonial Link Avialable Here

பூசம் நட்சத்திர பெண்கள் குணம்

 

பூச நட்சத்திரத்தின் அதிபதி, `நீதிமான்’ என்று போற்றப்படும் சனீஸ்வர பகவான். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகச் சிறந்த அறிஞர்களாகவும், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பீர்கள். மிகக் கடுமையான பிரச்னைகளுக்குக்கூட எளிதாகத் தீர்வு கண்டு சமாளித்துவிடுவீர்கள். தெய்வ பக்தி நிறைந்திருக்கும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். பல துறைகளிலும் விஷய ஞானம் பெற்றிருப்பீர்கள். வீடு, வாகன வசதிகளைப் பெற்றிருப்பீர்கள். பெற்றோரிடமும், வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளிடமும் மிகுந்த அன்பு கொண்டிருப்பீர்கள். மனோ திடம் கொண்டவர்களாகவும், எப்போதும் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும்கூட உயர்ந்த நிலையை அடைந்துவிடுவீர்கள். எப்படிப்பட்ட நெருக்கடியான நிலை ஏற்பட்டாலும், சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். அரிய பல காரியங்களைச் சாதித்தாலும், `இந்தப் பூனையும் பால் குடிக்குமா?' என்று நினைப்பதுபோல் அடக்கமாகக் காணப்படுவீர்கள் பூசம் நட்சத்திரல் பிறந்தவர்கள்.

No comments:

Post a Comment