வன்னிய சொந்தங்கள் அனைவரும் வன்னியர் உலகம் blog ஐ follow செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம் New Update: Vanniyar Matrimonial Link Avialable Here

ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

 

ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

 ஒரே ராசி, நட்சத்திரம் உள்ளவர்களுக்குத் திருமணம் செய்யலாமா? செய்யக்கூடாதா? அப்படிச் செய்தால் என்ன பிரச்னை ஏற்படும்? என்று பலவித சந்தேகங்கள் ஏற்படுவதுண்டு.

 முதலில் திருமண பொருத்தம் என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்?

திருமண பொருத்தம் என்பது கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மனஒற்றுமை, மகிழ்ச்சி, இனிமையான தாம்பத்தியம், பிள்ளைப் பேறு, சுபிட்சமான எதிர்காலம் என இருவருடைய ஜாதகங்களிலும் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டு கணித்து அறிதல் ஆகும்.

 ஒரே ராசி, நட்சத்திரமாக இருந்தால், விவாக பொருத்தம் பார்க்கும் போது மணமகன், மணமகள் ஆகிய இருவரின் ஜாதகத்தில் உள்ள பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10 பொருத்தங்களும், ஜாதக கிரகநிலையை கொண்டு கிரக தோஷங்களை பார்த்தும் விவாகம் முடிவு செய்யப்படுகிறது.

 திருமண பொருத்தத்தில் மிகவும் முக்கியமானது நட்சத்திர பொருத்தம். நட்சத்திர பொருத்தத்தில் 10-க்கும் மேற்பட்ட பொருத்தங்கள் இருந்தாலும், ஆண்-பெண் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் சிலருக்கு முக்கிய பொருத்தமான மாங்கல்ய பொருத்தம் இருக்காது. தம்பதிகள் வெவ்வேறு ராசி, நட்சத்திரமாக இருந்தால் மிகவும் உத்தமம். ஏனென்றால் ஒரே ராசி, நட்சத்திரமாக இருந்தால் கிரகநிலை சரியில்லாத போது இருவருக்கும் ஒரே மாதிரியான பிரச்னைகள் ஏற்படும். அதாவது, ஏழரை சனி, அஷ்டமத்து சனி ஒரே சயமத்தில் வரும் போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புகள் அதிகம்.

 ஒரே ராசியாக இருந்தால் பெண்ணுக்கு பிந்தைய நட்சத்திரமாக ஆணுக்கு இருந்தால் நன்மை. ஒரே ராசியாக இருக்கும் பட்சத்தில் தம்பதிகளின் ரசனை ஒரே மாதிரியாக இருக்கும். மோசமான கிரகநிலையின் போது கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது. எனவே, ஒரே ராசி, நட்சத்திரக்காரர்களை ஒன்றாகச் சேர்த்து வைக்காமல் இருந்தால் மிகவும் நல்லது. ஆனால், ஒரே ராசியாக இருந்தாலும், வெவ்வேறு நட்சத்திரத்தில் இருந்தால் ஓரளவு பிரச்னை குறையும்.

 சரி, எந்தெந்த நட்சத்திரங்களை இணைக்கலாம், எந்தெந்த நட்சத்திரங்களை பரிகாரத்தின் மூலம் இணைக்கலாம். இணைக்கக்கூடாத நட்சத்திரங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

 இணைக்கக்கூடிய நட்சத்திரங்கள்

ஆண், பெண் இருவரும், ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரம் உள்ளவர்களைத் திருமணம் செய்து வைப்பது மிகவும் உத்தமம்.

 பரிகாரத்தின் மூலம் இணைக்க வேண்டிய நட்சத்திரங்கள்

அசுவினி, கார்த்திகை, மிருகசிரீஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம் சித்திரை, அனுஷம், பூராடம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரத்தின் மூலம் திருமணம் செய்து வைக்கலாம்.

திருமணம் செய்யக்கூடாது நட்சத்திரங்கள்

ஆண், பெண் பரணி ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி இவை ஒரே நட்சத்திரமாக இருந்தால் கண்டிப்பாக திருமணம் செய்யக்கூடாது. இது தம்பதியர் இடையே மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்

No comments:

Post a Comment