வன்னிய சொந்தங்கள் அனைவரும் வன்னியர் உலகம் blog ஐ follow செய்யுமாரு கேட்டுக்கொள்கிறோம் New Update: Vanniyar Matrimonial Link Avialable Here

இலக்கியங்களில் வன்னியர்

இலக்கியங்களில் வன்னியர்

The Sangam  Literature, "Pathitru Pathu" (பதிற்றுப் பத்து) refers about "Vanniya Mandram" (Kings Burial Place).  During cholas time, the "Kings Burial Place" has been referred as "Palli Padai Koil" :-

"மன்னர் மறைத்த தாழி

வன்னி மன்றத்து விழங்கிய காடே" 

திரிகடுகம், நல்லாதனார், பாடல்-46  says the following :-

"கால் தூய்மை இல்லாக் கலிமாவும் காழ்கடிந்து

மேல் தூய்மை இல்லாத வெங்களிறும் சீறிக்

கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இம் மூன்றும்

குறுகார் அறிவுடையார்"



 

The Sangam Age Literature "Thirikadugam" refers about "Palli".   The poet compares the Vanniyas "Valours/Powers" at par with "Horses" and "Elephants", which were used in the battle fields.   The poet further says about "Warriors Attitude".  Such "Attitude" (Kshatriyas Attitude) was mandatory in those days to conquer many victories.  During imperial cholas time, we have the names such as "Vettung Kai Azhagiya Kachiyarayar" (வெட்டுங்கை அழகிய கச்சியராயர்),  "Atkolli Kadavarayar" (ஆட்கொல்லி காடவராயர்), "Val Valla Peruman" (வாள் வல்ல பெருமான்) etc.  

மன்னர்கள் தமது முன்னோர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் எழுப்பினர்.  இவற்றில் வழிபாடுகளை கூட அவர்கள் நடத்தினர்.  இத்தகைய நினைவுச் சின்னங்களுக்கு "கோட்டம்" எனவும் "பள்ளி வாயில்" எனவும் பெயர் வழங்கப்பெற்றது :-

"இந்த ஈமப்புறங்காட்டு அரசர்க்கமைந்த ஆயிரம் கோட்டம்"   (மணிமேகலை, வரிகள் - 165 & 166).

"ஓதுக்கின்றிணி புதுப் பூம்பள்ளி

வாயின் மாடந்தொறு மைவிடை விழ்ப்ப

நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே"     (புறம் 33 : 20 -22)

விளக்கம் :  ஒவ்வொரு பள்ளி மாடத்துக்கும் சென்று சோழ மன்னன் நலங்கிள்ளி வழிபாடு செய்தான் என்று புறநானூறு கூறுகிறது.   "பள்ளி மாடம்" என்பது அரச குலத்தோரின் சமாதி.  "பள்ளி" என்ற சொல் அரச குலத்தில் வழங்கப்பட்டு வந்ததை இங்கு நினைவு கொள்ள வேண்டும்.    

"வன்னி" எனில் "மன்னன்" :-

 

 

கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து  இருக்கிறார்.  திருவள்ளுவரின் காலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது.  இதில் "அரசன்" என்று குறிப்பிட "வன்னி" என்ற சொல்லையே கல்லாடனார் பயன்படுத்தி இருக்கிறார்.  

"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்

றரிதரு குட்டியாய பன்னிரண்டினைச்

செங்கோல் முளையிட் டருணீர் தேக்கிக்

கொலைகள வென்றும் படர்களைக் கட்டுத்

திக்கு படரானை வேலி கோலித்

தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கும்

நாற்படை வன்னியராக்கிய பெருமான்" 

விளக்கம் :  பன்னிரண்டு பன்றிக் குட்டிகளை நாற்படை வன்னியராகச் சிவபெருமான் படைத்தார் என்கின்றது கல்லாடம்.  இவ்வுலகில் தருமம் என்னும் பயிர் தழைத்து ஓங்கும் வகையில் நால்வகை சேனைகளுடன் வன்னியர்களை உண்டாக்கிய கடவுள். பன்னிரண்டு பன்றிக் குட்டிகள் என்பது வேளிர்களை குறிப்பதாகும்.

மகாபாரதம், ஆதிபருவம், 169-வது ஸ்லோகத்தில், "யாகசேனர் இயற்றிய வேள்வித்தீயினின்றும் 'திருஷ்டத்யும்மனும்', 'திரௌபதியும்' தோன்றினர்" என்று கூறப்பட்டுள்ளது.    வில்லிபுத்தூரார் மகாபாரதமும், எங்கள் குல திரௌபதியை "வன்னியில் பிறந்த மாமயிலும்" என்று குறிப்பிடுகிறது.       

மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-

"ஓ அக்கினியே  !  நீதான் இரண்டு

அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !

நீயே சூரியன்  !  நீயே சந்திரன்  !

நீயே வாயு  ! "

மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-

"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்

சம்புமக்நி  மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "           

 

 

விளக்கம் :  வேதத்தில் மிகவல்ல  பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.  

தமிழ் பாகவதம் 8-வது காண்டத்தில் கூறப்பட்டுள்ள செய்தி :-

"இயம்பு இரண்டாம் சீர் மனுவினை உரைக்கின்

இலங்கும் அக்கினி முனம் ஈன்ற

நயம் தரு சுவாரோசி நவன் உலகம்

நவை அறக் காக்கும் நாள்"

விளக்கம் :  அக்கினியின் மகனான ஸ்வரோசி எனப்படும் இரண்டாம் மனு அரசுரிமை பெற்று அரசாட்சி செய்தான்.  இதே விபரம் பாகவதம் (சமஸ்கிருதம்) 8-வது காண்டம், முதல் அத்தியாயம், 20-வது ஸ்லோகத்திலும் கூறப்பட்டுள்ளது. 

"மச்சபுராணத்திலே, 195-வது  அத்தியாயத்திலே, அங்கிரஸுவின் கோத்திரத்திலுதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறுமிடத்து அக்கினி என்னும் அரசனைக் கூறி, அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறி,  அதன்பின்னர் பாண்டு என்னும் அரசனையுங் கூறப்பட்டிருக்கின்றது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்பதற்கு வடமொழி இலக்கணஞ் செய்த பாணினி முனிவரும் "பாண்டிய" வென்னும் மொழிக்குக் காரணத்துடன் பகுப்பிலக்கணம் சொல்லி பாண்டியர் பாண்டுவின் வம்சத்தில் வந்தவரென்று கூறியிருக்கின்றனர்.    (Rev. William Tailor, Pandiya History, Second volume).  

No comments:

Post a Comment