வன்னியர்கள்
யார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்
வன்னியர் (Vanniyar) அல்லது வன்னிய குல சத்திரியர்
(Vanniya Kula Kshatriya's) எனப்படுவோர் தமிழகத்தில் குறிப்பாக வடதமிழகத்தில் (காவேரி
ஆற்றின் வடக்கு பகுதிகளில்) அடர்த்தியாகவும், மற்ற பகுதிகளில் குறிப்பிட்ட அளவிலும்
வாழுகின்ற ஒரு மிகப்பெரிய தமிழ் சாதியினர் ஆவர். இவர்கள் புதுச்சேரி, தெற்கு கருநாடகம்
மற்றும் தெற்கு ஆந்திரா போன்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தமிழ்நாடு அரசின்
இட ஒதுக்கீடு பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ளனர்.இவர்கள் முன்னொரு
காலத்தில் பள்ளி என்ற பெயரால் அறியப்பட்டனர்.
வன்னியர்
சொல்லுக்கான விளக்கம்
வன்னியருக்கான பல சொற்பிறப்பியல் கருத்துகள் உள்ளன, சமசுகிருதத்தில்
வன்னி என்னும் சொல்லுக்கு (நெருப்பு/தீ) என்று பொருள்மற்றும் திராவிடத்தில் (வலிமை)
என்பதாகும். அதாவது நெருப்பிலிருந்து (அக்னி/தீ) பிறந்தவர் என்று பொருள்படும். பள்ளி
என்னும் சொல்லுக்கு சமசுகிருதத்தில் வனம் (காடு) என்பதாகும்.
வன்னி என்னும் பெயரிலிருந்து வன்னியர்கள் தங்கள் சாதி பெயரைப்
பெறுகிறார்கள் என்று அல்ஃப் ஹில்ட்பெடில் குறிப்பிடுகிறார்.வன்னி என்ற வார்த்தை சமசுகிருத
மொழியில் நெருப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழியில் இது ஒரு முக்கியமான
மரத்தின் பெயராகும். இது முனிவரின் தொடர்பு, மேலும் புராணங்களுடன் தொடர்புகளுக்கு இது
வழிவகுக்கிறது
வன்னியர்
குல பட்டங்கள்
படையாட்சி, பள்ளி, கவுண்டர், நாயக்கர், சம்புவரையர், காடவராயர்,
கச்சிராயர், காலிங்கராயர், மழவரையர், உடையார், சோழிங்கர் போன்ற 200க்கும் மேற்பட்ட
பட்டங்களை கொண்ட சாதியினர் ஆவார்.
வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.வன்னி
மரம் தல விருட்சமாக, தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும்
உள்ளது
No comments:
Post a Comment